வரலாறு ரொம்ப.முக்கியம் அன்னை என அழைக்கப்படும் மிரா அல்பாசா பிறந்த தினம் இன்று.

வரலாறு ரொம்ப... முக்கியம்
அன்னை என அழைக்கப்படும் மிரா அல்பாசா பிறந்த தினம் இன்று.


அன்னை மிரா அல்பாசா (பிப்ரவரி 21, 1878 – நவம்பர் 17, 1973) என்பவர் ஒரு ஆன்மிகவாதி ஆவார்.


இவரை நேசிப்பவர்களால் அன்னை (மதர்) எனவும் அழைக்கப்படுகிறார்.


இவர் 1878 ஆம் ஆண்டில் பாரிஸ் மாநகரில் பிறந்தார்.


இவரின் பெற்றோர்கள் துருக்கி, எகிப்து நாட்டினர்.


இவர் ஸ்ரீஅரவிந்தரை மார்ச் 20, 1914-ல் புதுச்சேரியில் ஆர்யா என்னும் பத்திரிகையில் பணி புரியவும், தொகுப்புப் பணி செய்யவதாற்காக சந்தித்தார்.


பின் முதலாம் உலகப்போர் காரணமாக புதுச்சேரியை விட்டு ஜப்பான் நாட்டிற்குச் சென்று சில ஆண்டுகள் வாழ்ந்தார்.


ஜப்பானில் ரவீந்திரநாத் தாகூரை சந்தித்தார்.


1920-ல் அவர் மீண்டும் புதுச்சேரிக்கு வந்து வசித்தார்.


அதன் பின் நாடு திரும்பிய இவர் உலகில் உள்ள பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.


இறுதியில் அரவிந்தர் மற்றும் அவரை பின்பற்றுபவர்களுடன் தங்கினார்.


இந்தியாவில் உள்ள புதுச்சேரியில். இவரைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் அங்கே இருந்த குடியிருப்பானது சில ஆண்டுகளில் ஆசிரமம் ஆனது.


அங்கு அரவிந்தருடன் ஒருங்கிணைந்த யோகாவினைப் பற்றி மக்களுக்குப் போதனை செய்தனர்.


அரவிந்தரின் இறப்பிற்குப் பின் ஆசிரமத்தில் பள்ளிக்கூடம் ஒன்றைத் துவங்கினார்.


மேலும் சோதனை அடிப்படையில் ஆரோவில் எனும் தன்னாட்சி நகரத்தினைத் தோற்றுவித்தார்.


இந்த நகரத்தின் முக்கிய நோக்கம் இங்கு உள்ள மக்கள் தேசியம், மொழி, சமயம்,சாதி ஆகிய எந்த வேறுபாடுகளும் இன்றி இருப்பதை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள் தமிழ் சுடர் ஆன்லைனில்..


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image