திருச்சி 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர் நலச்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்!
திருச்சி:-
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்க கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாவட்ட செவிலியர் நல சங்க கூட்டமைப்பின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் காயத்ரிதேவி தலைமையில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செயல் தலைவர் கோமதி கருத்துரை வழங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கிராம சுகாதார செவிலியர்கள் முதல் மருத்துவர்கள் வரை பழிவாங்கும் நடவடிக்கைகளான ஒழுங்கு நடவடிக்கை, மாறுதல் ஆணைகள். தற்காலிக பணிநீக்கம் ஆகியவை நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும், நிரந்தர குடும்பநல அறுவை சிகிச்சைக்கு வற்புறுத்தி கிராம சுகாதார செவிலியர் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
மேல் சிகிச்சைக்கு பரிந்துரை பின்னர் ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனை, தனியார் மருத்துவமனை உள்ளவர்தான் தாய்மார்களை பொறுப்புடன் கவனித்துக் கொள்ளவேண்டும்.கிராம சுகாதார செவிலியர் அழைக்கக்கூடாது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
செய்தி- சிறப்பு செய்தியாளர்.