பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்கான சாவி இப்போ மீண்டும் ஆளுநர் கையில்..
சென்னை : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரை ஆளுநரே முடிவெடுக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் நளினி ஆகியோர் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை பெற்று வருகின்றனர். தண்டனைக் காலம் முடிந்து இவர்கள் சிறை தண்டனை பெற்று வருவதாகவும், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் கோரிக்கை வலுத்து வந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையிலும், 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசும், சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. ஆனால், தற்போது, வரை 7 பேரின் முடிவில் ஆளுநர் மவுனம் காத்து வருகிறார்.
இந்த நிலையில், குற்றவாளிகளின் ஒருவரான நளினி ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவில், தண்டனை காலம் முடிந்த பிறகும், தன்னை சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தன்னை விடுவிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவு எடுக்கலாம். பேரறிவாளளின் கருணை மனுவின் மீதும் ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம். ஆனால், தண்டனை பெற்று வரும் 7 பேரின் விடுதலை குறித்து கடந்த 2018-ல் தமிழக அரசு செய்த பரிந்துரை நிராகரிக்கப்பட்டுவிட்டது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...தா
செய்தி- சிறப்பு செய்தியாளர்