தமிழ் நாட்டில் ரஜினிக்கு நிகர் அஜித் தான். அவர் மலை இவரு  தலை என  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  கருத்து.


தமிழ் நாட்டில் ரஜினிக்கு நிகர் அஜித் தான். அவர் மலை இவரு  தலை என  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  கருத்து.


தமிழகத்தில்  தளபதி என்ற இருவர் அழைக்கப்படுகின்றனர். ஒருவர் அரசியல் வாதி ஒருவர் சினிமா வாதி அவர்கள் யாரும் இல்லை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அன்பு மகன் இன்றைய திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் புரட்சி இயக்குனர் என்று பெயர் பெற்ற எஸ்‌.ஏ சந்திரசேகரன் மகனும் தமிழ் சினிமாவில் இளையதளபதி என்ற அழைக்கப்படும் விஜய் நடித்த பிகில் பட விவகாரம் தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர்  விஜயிடம் வருமான வரித்துறையினர் அதிரடி  விசாரணை நடத்தினர். மேலும், அவரது அலுவலகத்திலும் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சம்பவம் தமிழகத்தில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் ஆளும் கட்சியின் அழுத்தம் இருக்கலாம் என்று கூறப்பட்டது.


இந்தநிலையில், விருதுநகரில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில்.  
‘இது அ.தி.மு.க ஆட்சியின் கடைசி பட்ஜெட் அல்ல. அடுத்த ஐந்து ஆண்டு ஆட்சிக்கான முதல் பட்ஜெட். தமிழக அரசின் பட்ஜெட் வரி இல்லாத யாரையும் பாதிக்காத முத்தான பட்ஜெட். விஜயிடம் நடத்திய வருமான வரித்துறை சோதனையில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. விஜய், ரஜினிக்கு நிகரானவர் இல்லை. ரஜினிக்கு நிகரானவர் எப்போதும் நடிகர்  அஜித் தான். ரஜினி மலை, அஜித் தலை’ என்று தனது கருத்தை டைமிங் காமெடியில் தெரிவித்தார். இந்த கருத்து தற்போது தமிழக  இளைஞர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.


செய்திகள்- கோவி. சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image