புதிய 5  மாவட்டங்களுக்கு  ரூ.550 கோடி நிதி ஒதுக்கீடு. பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் என தமிழக நிதிநிலை அறிக்கை...

புதிய 5  மாவட்டங்களுக்கு  ரூ.550 கோடி நிதி ஒதுக்கீடு. பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் என தமிழக நிதிநிலை அறிக்கை...


தமிழக அரசின் 2020 – 21ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல்..


பொருளாதார நெருக்கடிகளை தமிழகம் திறமையாக சமாளித்துள்ளது.


11 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் நிறுவ ரூ.1,200 கோடி ஒதுக்கீடு


அண்ணாமலை பல்கலை., மருத்துவக் கல்லூரியை அரசு ஏற்று, கடலூர் மாவட்ட மருத்துவ கல்லூரியாக செயல்படும்


மின்சாரத்துறைக்கு ரூ. 20.115 கோடி ஒதுக்கீடு


கல்வித்துறைக்கு ரூ. 34,841 கோடி ஒதுக்கீடு


சுகாதாரத்துறைக்கு ரூ. 15,863 கோடி ஒதுக்கீடு


உணவு மானியத்திற்கு ரூ. 6,500 கோடி ஒதுக்கீடு


நிதிப்பற்றாக்குறை விகிதம் 2021-22
-ம் ஆண்டில் 2.58 சதவீதம்


மேலும், சுமார் 59 ஆயிரம் கோடி தமிழக அரசு கடன் பெற திட்டம்


சென்னை – பெங்களூரூ தொழில் வழித்தட திட்டத்தின் கீழ் திருவள்ளுர் மாவட்டத்தில் 21,000 ஏக்கரில் தொழில் முனையம்


எரிசக்தி துறை ரூ. 20,115.58 கோடி ஒதுக்கீடு


தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ. 74.08 கோடி ஒதுக்கீடு


மாநிலங்களுக்கு இடையிலான நிதிப்பகிர்வில் தமிழகத்தின் பங்கு 4.789 சதவீதமாக உயர்வு


சென்னையில் மாநில திறன் பயிற்சி நிலையம் ரூ. 1.60 கோடியில் உருவாக்கப்படும்


கீழடியில் அகழ்வைப்பகம் அமைக்க ரூ. 12.21 கோடி ஒதுக்கீடு


போக்குவரத்து துறைக்கு ரூ. 2,716 கோடி ஒதுக்கீடு


அம்மா உணவகங்களுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு


நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ. 15,850 கோடி ஒதுக்கீடு


சென்னை – கன்னியாகுமரி இடையே பொருளாதார பெருவழிச்சாலை திட்டம்


தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதமான 7.27 சதவீதம், கணிக்கப்பட்ட தேசிய பொருளாதார வளர்ச்சி விகிதத்தை விட அதிகம்


மாநிலங்களுக்கு இடையேயான நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கான பங்கு சிறிதளவு அதிகரித்துள்ளது


மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் தமிழகத்தின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும்


சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ. 4,315 கோடி ஒதுக்கீடு


பேரிடர் மேலாண்மைக்கு ரூ. 1,360 கோடி ஒதுக்கீடு


பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ. 3,700 கோடி ஒதுக்கீடு


தமிழக காவல்துறைக்கு ரூ. 8,876 கோடி ஒதுக்கீடு


ஹார்வார்டு, ஹுஸ்டன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி கற்பித்தலை கொண்டு வர சீரிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன


தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ. 405 கோடி ஒதுக்கீடு


சிறைச்சாலைகள் துறைக்கு ரூ. 392 கோடி ஒதுக்கீடு


நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு ரூ. 18,540 கோடி ஒதுக்கீடு


சேலம் – புத்திரகவுண்டம்பாளையத்தில் ரூ. 4.50 கோடியில் புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்படும்


நீதி நிர்வாகத்துறைக்கு ரூ. 1,403 கோடி ஒதுக்கீடு


திறன்மிகு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) திட்டங்களை செயல்படுத்த ரூ. 1,650 கோடி ஒதுக்கீடு


வேளாண்துறைக்கு ரூ. 11,894 கோடி ஒதுக்கீடு


அம்ருத் திட்டத்தை செயல்படுத்த ரூ.1,450 கோடி ஒதுக்கீடு


தொல்லியல் துறைக்கு ரூ. 31,93 கோடி ஒதுக்கீடு


வரும் நிதியாண்டில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் ரூ. 11 ஆயிரம் கோடி பயிர்க்கடன்


சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ. 4,315 கோடி ஒதுக்கீடு


நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 5,306.95 கோடி ஒதுக்கீடு


குடிநீர் வழங்கல்துறை ரூ. 18,540 கோடி ஒதுக்கீடு


ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 6,754.30 கோடி ஒதுக்கீடு


கால்நடைத்துறைக்கு ரூ. 199 கோடி ஒதுக்கீடு


அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கு ரூ. 253.14 கோடி ஒதுக்கீடு


நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு


சுத்திகரிக்கப்பட்ட நீர் மறுபயன்பாட்டுக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது


காவல்துறைக்கு ரூ.8,876 கோடி ஒதுக்கீடு


மீன்வளத்துறைக்கு ரூ. 1,229 கோடி ஒதுக்கீடு


அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு


காவேரி – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல், முதனிலை பணிகளுக்கு ரூ. 700 கோடி ஒதுக்கீடு


சிறைச்சாலைத்துறைக்கு ரூ. 392 கோடி ஒதுக்கீடு


எரிசக்தி துறைக்கு ரூ. 20,115.58 கோடி ஒதுக்கீடு


நீர்பாசனம் மற்றும் நீர்வள ஆதார துறைக்கு ரூ. 6,991 கோடி ஒதுக்கீடு


குடிநீர் வழங்கல்துறைக்கு ரூ. 18,540 கோடி ஒதுக்கீடு


1,364 நீர்பாசன பணிகள் ரூ. 500 கோடியில் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்படும்


குடிமராமத்து திட்டத்திற்கு ரூ. 300 கோடி நிதி ஒதுக்கீடு


வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ. 4,025 கோடி வழங்க 15-வது நிதிக்குழு பரிந்துரை


நெய்வேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு


5 புதிய மாவட்டங்களில் ரூ.550 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகம் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்படும்


1,12,876 தனி வீடுகள், 65,290 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்


தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் 5 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவியை உலக வங்கியிடமிருந்து பெற்று செயல்படுத்தப்படும்


மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை 52.1 கி.மீ. தொலைவில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் விரைவில் துவங்கப்படும்


நகர்ப்புற ஏழை, எளியவர்களுக்கான நிலைக்கத்தக்க வீட்டுவசதி மற்றும் உறைவிடத் திட்டம் செயல்படுத்தப்படும்


அதிகாரிகள் – விவசாயிகளை இணைக்க உழவர் – அலுவலர் தொடர்பு எனும் பெயரில் புதிய திட்டம்


நிலுவையில் உள்ள பட்டா கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க புதிய சர்வேயர்கள் உருவாக்கம்


ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும்


நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் 53 ஏக்கரில் ரூ. 77 கோடி செலவில் பிரமாண்ட உணவுப் பூங்கா


1,28,463 குடும்பங்களுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது


நெல்லை, காரைக்குடி, தஞ்சை, பள்ளிப்பாளையம், திண்டுக்கல், தேனியில் ரூ. 431 கோடி செலவில் 6 துணைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன


உலக வங்கியின் ஆதரவுடன் சென்னை மாநகரக் கூட்டாண்மை எனும் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்


போக்குவரத்து, நீர் ஆதாரங்களின் தாங்குதன்மை, நகர நிர்வாகம் மற்றும் நிதிமேலாண்மை என 3 முக்கிய தூண்களை மையமாகக் கொண்ட திட்டம்


முதலமைச்சர் பசுமை வீடு திட்டத்தின் கீழ் 8,803 குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சத்தில் வீடுகள் கட்டித் தரப்படும்


வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் 5 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவியை உலக வங்கியிடம் இருந்து பெறப்படும்


ரூ. 3,000 கோடி செலவில் சென்னையில் பேரிடர் தணிப்பு திட்டத்திற்கு பரிந்துரை


சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க ரூ. 100 கோடி மானியம்


வரும் நிதியாண்டில் காவல்துறையில் புதிதாக 10,242 பேர் நியமிக்கப்பட உள்ளனர்


வரும் நிதியாண்டில் சீருடைப் பணியாளர்கள் சுமார் 10,276 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.


715 அறிவிப்புகளில் 537 அறிவிப்புகள் முழுமையாக நிறைவேற்றம்


161 அறிவிப்புகளுக்கு தேவையான ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ளன


17 அறிவிப்புகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது


அத்தியாவசிய உள்கட்டமைப்பு பணிகளை ரூ. 500 கோடி செலவில் மேற்கொள்ள ஒருமுறை சிறப்பு திட்டம் விரைவில் அறிமுகம்


ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.5,500 கோடியாக உயர்வு


1,500 கி.மீ. நீளமுள்ள சாலைகளை மேம்படுத்தும் பணி ரூ. 1,050 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்


தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் 2-வது கட்ட திட்டப் பணிகளுக்கு ரூ. 615 கோடி ஒதுக்கீடு


சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ரூ. 218 கோடி செலவில் மேலும் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள்


ஏழை, எளிய மக்களுக்கு விரிவான விபத்து காப்பீடு திட்டத்திற்கு ரூ. 250 கோடி ஒதுக்கீடு


8.3 சதவீதமாக இருந்த அவசர சிகிச்சை பிரிவு உயிரிழப்பு 2.7 சதவீதமாக குறைந்துள்ளது


கல்லணைக் கால்வாய் திட்டத்திற்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு


நெடுஞ்சாலைத்துறையில் சாலை பாதுகாப்பிற்கு என்று தனியாக ஒரு பிரிவு உருவாக்கப்படும்


சென்னை, மதுரை மற்றும் கோவையில் சாலை பாதுகாப்பு பிரிவுகள் உருவாக்கப்படும்


தமிழகத்தின் 8.58 லட்சம் கோடி மொத்தச் செலவிலான 179 திட்டங்கள் மத்திய அரசின் பட்டியலில் இணைப்பு


சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் வடிகால்கள் சீரமைக்க ரூ. 5,439 கோடி ஒதுக்கீடு


ரூ. 25 கோடியில் சிட்லபாக்கம் ஏரி மறுசீரமைக்கப்படும்


கரும்பு விவசாயிகளிடம் நுண்ணீர் பாசனத்தை ஊக்குவிக்க ரூ. 75 கோடி ஒதுக்கீடு


டன் ஒன்றுக்கு ரூ. 100 என்கிற விதத்தில் அரவைக் கால போக்குவரத்து மானியம் வழங்க ரூ. 110 கோடி


புதிதாக 45 உழவர் – உற்பத்தியாளர்கள் அமைப்புகள் ஏற்படுத்தப்படும்


பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்திற்கான மாநில அரசின் பங்களிப்பு ரூ. 724 கோடியாக உயர்வு


ரூ. 1,845 கோடி செலவில் 7.41 லட்சம் ஏக்கர் நிலங்கள் நுண்ணீர் பாசன வசனம் வசதி இப்படி பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட  நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் துணை முதல்வர் பன்னீர்செல்வம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.


செய்தி- கோவி. சரவணன்...


Popular posts
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image