பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இயங்கி வரும் பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரியில் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் தற்போது உலக அளவில் பரவிவரும் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கல்லுரி முதல்வர் முன்னிலை வகித்தார். இம்முகாமில் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக எப்படி கை கழுவுவதன் முக்கியத்துவம் மற்றும் கை கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தன் சுத்தம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
கை கழுவும் முறைகள் பற்றி செயல்முறை விளக்கம் சுகாதார ஆய்வாளர் தமிழரசு செய்து காட்டினார். இறுதியாக,
சுகாதார ஆய்வாளர் மனோகரன் நன்றி கூறினார்.
செய்திகள்- கோவி.சரவணன்- அரவிந்தன்..