வேலூரில் ரூ46 கோடியே 51 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணி துவக்கம்.
வேலூர் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ 46 கோடியே 51 லட்சம் மதிப்பில் நவீன மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.நவீன பஸ் நிலையத்தில் 84 பஸ்கள் நிற்கும் வகையில் நிலை நிறுத்துங்கள் அமைக்கப்பட உள்ளது தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய 59 கடைகளும் புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட உள்ளன.தற்போது பஸ் நிலைய கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டு இடிக்கும் பணிகள் நடந்து வருகிறது.புதிய பஸ் நிலையத்தில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை காலை நடந்தது இதில் அமைச்சர் கே சி வீரமணி கலந்துகொண்டு பஸ் நிலைய கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர்.
தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது மேலூரில் புதிய பஸ் நிலைய பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது 9.25 ஏக்கர் பரப்பளவில் தற்போது பஸ் நிலையம் நவீனமயமாக கட்டப்பட உள்ளது தேவைபட்டால் பஸ் நிலையம் விரிவுபடுத்தப்படும் 2042 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி போக்குவரத்து நெரிசல் இல்லாத வகையில் பஸ் நிலையம்அமைக்கப்படுகிறது 2050 வரை இந்த பஸ் நிலையம் போதுமானதாக இருக்கும் வேலூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உயர்மட்ட மேம்பாலங்கள் புறவழிச் சாலைகள் அமைக்க திட்ட மதிப்பீடு செய்து மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது நிதிநிலை அறிக்கையில் அவற்றுக்கு நிதி ஒதுக்கிய பிறகு பணிகள்தொடங்கப்படும் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் விரைவாக முடிக்கஉத்தரவிடப்பட்டுள்ளது 6 மாதங்களில் பணிகளை முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது ஆறு மாதங்களுக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் வேலூர் மாவட்ட கலெக்டர் அடிக்கடி பஸ் நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து பஸ்கள் இயக்குவது குறித்து கலெக்டர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள் இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் சண்முகசுந்தரம் மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய் அதிமுக மாவட்ட பொருளாளர் மூர்த்தி தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஜனனி சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பஸ் நிலையத்தில் கட்டுமான பணிகள்தொடங்கப்பட்டுள்ளதால் வேலூர் பழைய பஸ் நிலையம் மற்றும் செல்லியம்மன் கோவில் பின்புறம் தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன இதிலிருந்து பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அதன்படி பள்ளிகொண்ட வழியாக குடியாத்தம் ஆம்பூர் திருப்பத்தூர் ஓசூர் பெங்களூர் செல்லும் பஸ்கள் செல்லியம்மன் கோவில் பின்புறம் இருந்து இயக்கப்பட உள்ளன இதேப்போ சத்துவாச்சாரி வழியாக காஞ்சிபுரம் அரக்கோணம் சென்னை ஆகிய இடங்களுக்கு செல்லும் வகையில் இயக்கப்பட உள்ளது.
மாநகர பகுதியில் இயக்கப்படும் அனைத்து டவுன் பஸ்கள் திருவண்ணாமலை ஆரணி வழியாக செல்லும் பஸ்கள் காட்பாடி வழியாக குடியாத்தம் மற்றும் சித்தூர் செல்லும் பஸ்கள் அனைத்தும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இய்க்கப்பட உள்ளது.சித்தூர் காட்பாடி வழியாக வரும் பஸ்கள் செல்லியம்மன் கோவில் பின்புறமுள்ள நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிய பின்னர் நேஷனல் தியேட்டர் சந்திப்பு பழைய பைபாஸ் ரோடு மக்கான் சந்திப்பு வழியாக பழைய பஸ் நிலையம் செல்ல வேண்டும் ஆம்பூர் திருப்பத்தூர் வழியாக வந்து செல்லும் பஸ்கள் மக்கான் சந்திப்பு பழைய பைபாஸ் சாலை நேஷனல் தியேட்டர் சந்திப்பு க்ரீன் சிக்னல் வழியாக இயக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...