இந்த நாடு இளைஞர்கள் கையில் தான் உள்ளது துணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வம்
சென்னை:
சென்னை அடையாறில் உள்ள அரசு இளைஞர்கள் விடுதி அரங்கில் மத்திய உள்துறை இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறையின் 12 வது பழங்குடி இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் கலாச்சார விழா நடைபெற்றுது இந்நிகழ்ச்சியில் தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னிர் செல்வம் பங்கேற்று பரிசுகளை வழங்கி வழங்கினார்.
துணை முதல்வர் ஓ. பன்னிர்செல்வம் மேடை பேச்சு..
இந்தியாவில் 50 சதவீதம் இளைஞர்கள் தான் அங்கம் வகித்த வடுகின்றனர் இளைஞர்கள் உழைத்து உலகின் முன்னணியில் நிறுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறி இருக்கிறார்.
இளைஞர்கள்,இளம் பெண்களின் கையில் தான் இந்த நாடு உள்ளது கட்டாற்றின் வெள்ளம் போல் திரண்டு வரும் சிந்தனைகளை முறை படுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாக உள்ளது.
உலகம் முழுவதும் இளைஞர்கள் சக்தியை சார்ந்தே இயங்கி வருகிறது கொல் அல்லது கொல்லப்படுபாவாய் என்று இருந்த விதியை வெல் அல்லது வெல்லப்படுவாய் என்று மாறி இருக்கிறது.
பழங்குடி மக்கள் என்றால் காடு மலைகளில் அலைந்தவர்கள்,கல்வி அறிவு இல்லாதவர்கள் என்று யாரவது சொன்னால் அவற்றி என்று செவி சாய்க்காதீர்கள் உங்கள் முன்னோர்கள் காட்டில் உள்ள மூலிகைகளை கொண்டு இயற்க்கை மருத்துவத்தை கண்டு பிடித்தவர்கள் இந்த உலகத்தின் முன்னோடிகள் நாங்கள் தான் என்று பெருமிதத்துடன் அவர்களிடம் கூறுங்கள் என்று அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் பேசுகையில், தமிழகத்தின் பாரம்பரியத்தையும்,மற்ற மாநிலங்களில் உள்ள கலாச்சரைத்தையும் வளர்க்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்து இருக்கிறது.
ஒவ்வோரு ஆண்டும் தமிழக அரசின் மாநில நிதிநிலை அறிக்கை ஏழை எளிய மக்களுக்கும், கிராம மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில். செயல்படுத்தப்படுகிறது. அதன்படி சமூக பாதுகாப்பு திட்டங்களை ஜெயலலிதா எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தி வந்தார் அந்த வகையில் நல்ல முறையில் செயல்படுத்தி நாங்கள் ஆட்சி செய்து வருகிறோம் நீங்கள் நினைக்கிற ஒரு நாட்டின் பொருளாதாரம் மேம்பட அனைவரும் எதிர் பார்க்கும் நல்ல நிதிநிலை அறிக்கையாக வருகின்ற நிதில்நிலை அறிக்கை இருக்கும் என்று கூறினார்.
தர்மயுத்தம் தொடங்கி மூன்றாவது ஆண்டு தொடங்கியிருக்கிறது.நீங்கள் தர்மயுத்தம் தொடங்கியதற்கான அந்த நோக்கம் நிறைவேறி விட்டதா ? என்ற கேள்விக்கு துணை முதல்வர் சிரித்துக்கொண்டே கடந்து சென்றார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
tamilsudarr.page.
செய்தி- சிறப்பு செய்தியாளர்.