திருப்பத்தூரில் இந்திய குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜக கட்சியினர் பேரணி.
இந்திய குடியுரிமை சட்டத்தை ஆதரித்தும் இந்தியாவில் பல இடங்களில் குடியுரிமை சட்டத்திருத்ததை எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த போராட்டங்கள் மூலம் பல இடங்களில் கலவரங்கள் ஏற்பட்டன இதை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட பாஜக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. இந்த பேரணி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. இந்த பேரணிக்கு மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்து பேசுகையில்.
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தினால்(CAA2019) இந்தியா, அல்லது தமிழக மண்ணில் பிறந்த யாருக்கேனும் பாதிப்பு இருப்பதாக ஆதாரபூர்வமாக நிருபித்தால் அவர்களுக்கு 5 சவரன் தங்க நகை பரிசு வழங்கப்படும். குறிப்பாக தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து இஸ்லாமிய மக்களை அழிக்கும் நோக்கில் தவறான கருத்து கூறி அமைதியாக இருக்கும் இந்தியாவை கலவர பூமியாக மாற்ற சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர். திமுகவுக்கு அரசியல் செய்ய வேற எதுவும் கிடையாத காரணத்தினால் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் என்ற பெயரில் ஈடுபட்டுள்ளனர். இஸ்லாமிய நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் இந்தியாவில் தஞ்சம் அடைந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது என பேசினார். இந்த பேரணியில் மாவட்ட செயலாளர் தொழிலதிபர் சரவணன், மாவட்ட துணை தலைவர் வக்கீல் அன்பழகன், நகர தலைவர் அருள்மொழி, நகர பொதுச்செயலாளர் பார்த்திபன், கந்திலி ஒன்றிய தலைவர் பாரத் விஜய் உட்பட 1000த்திற்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி.சரவணன்...