கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் தமிழ் மாநில கட்சி தீர்மானம்...


கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் தமிழ் மாநில கட்சி தீர்மானம்...


கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ் மாநில கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நகர  செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் பறக்கும் படை சக்தி கலந்துகொண்டு கட்சி வளர்ச்சி திட்டங்கள் பற்றியும் குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலவும் பல்வேறு பொதுமக்கள் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடைப்பெற்றது. அதில் முக்கிய தீர்மானமாக கிருஷ்ணகிரி நகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் சுங்கச்சாவடியை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றவேண்டும். இந்த சுங்க சாவடி நகரின் மையப்பகுதியில் இருப்பதால் பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன. அதேபோல் கிருஷ்ணகிரி நகரின் 26 வது வார்டில் உள்ள திருவள்ளுவர் தெருவில் நகராட்சிக்கு சொந்தமான பள்ளி அருகில் பெரிய பாதாள குழிகள் உள்ளதால் எந்த நேரத்திலும் விபத்துகள் ஏற்ப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. உடனடியாக நகராட்சி நிர்வாகம் அதை சரி செய்ய வேண்டும். வருகின்ற கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்சினைகளை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என இதுபோன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில்  ஒன்றிய செயலாளர் ரமேஷ், நகர தலைவர்சுரேஷ், நகர பொருளாளர் ராமச்சந்திரன். நகர இளைஞரணி தலைவர் மரிய டெரிக் ,நகர தொழிலாளர் அணி செயலாளர். புருஷோத்தமன் மற்றும்  பர்கூர் ஒன்றிய செயலாளர்  வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர நிர்வாகி  கண்ணபிரான் நன்றி கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..


செய்திகள்- கோவி. சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image