நண்டு வளர்ப்பில் 3 கோடி ரூபாய் நூதன மோசடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் வேலூரில் பரபரப்பு.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் முற்றுகையிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமாரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் முகநூல் மூலம் யூனிடாப் குளோபல் ஹோல்டிங் நிறுவனம் என கூறி ஆதித்யா குமார் என்பவர் நண்டு வளர்ப்பு செய்யுமாறும் அதில் ஒரு பங்கு தொகையை முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி பலரும் ரூ.10 லட்சம் முதல் ரூ,50 லட்சம் வரையில் நண்டு வளர்ப்பில் லாபம் அடைந்து பணம் சம்பாதிக்கும் நோக்கில் பலரிடமிருந்து தொகையை பெற்று முதலீடு செய்துள்ளனர். மேலும் இதே போன்று வெங்கட் ,லஷ்மணன் ஆகிய இருவரும் ஆதித்யா குமாருடன் சேர்ந்து பொது மக்களை ஏமாற்றியுள்ளனர். இதில் சுமார் 400-க்கும் மேற்பட்டவர்கள் இந்த போலி நிறுவனத்தை நம்பி மூவரிடமும் பணம் கொடுத்துள்ளனர். ஆனால் பல மாதங்களாகியும் யாருக்கும் உரிய தொகை தரவில்லை மேலும் மக்களிடமிருந்து பெற்ற தொகையையும் தரவில்லை. இதுபோன்ற சுமார் ரூ.3. 79 கோடி வரையில் நூதன முறையில் மோசடி செய்து பணத்தை எடுத்து கொண்டு மூவரும் தலைமறைவாகிவிட்டனர். தங்களின் பணத்தை மீட்டுத்தர கோரியும் கோடிக்கணக்கில் மக்களின் பணத்தை மோசடி செய்த மூவரையும் கைது செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் நூதன மோசடியில் பல கோடி ரூபாய் ஏமாற்றப்பட்ட சம்பவம் வேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள் தமிழ் சுடர் ஆன்லைனில்..
செய்திகள்- கோவி.சரவணன்...