கேளம்பாக்கம் அடுத்த படூர் இந்துஸ்தான்  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டு நாள் நடைபெற்ற ஹிந்தோ உத்சவ் 2020 நிறைவு விழா..

கேளம்பாக்கம் அடுத்த படூர் இந்துஸ்தான்  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டு நாள் நடைபெற்ற ஹிந்தோ உத்சவ் 2020 நிறைவு விழா..


  செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த படூரிலுள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இவ்வாண்டு வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தின்  பகுதி நிறைவாக "ஹிந்தோஉத்சவ் 2020" பிரமாண்ட அரங்கில் கோலகலமான கலைத் திருவிழா 20.02.2020மற்றும் 21.02.2020ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. 


பல்வேறு கல்லூரிகளிலிருந்து வந்திருந்த 1500 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் "டூயல் டான்ஸ், வெரைட்டி, ஆர்.ஜே. ஹண்ட், போட்டோகிராஃபி, சோலோ சிங்கிங், ஜுங்க் ஆர்ட், 60 செகண்ட் ஃபிரேம், ரங்கோலி, வால் பெயின்டிங், லைட் மியூசிக், ரீஜினல் டான்ஸ், அடாப் ட்டியூன், ஸ்டீர்ட் தியேட்டர், ஆட்ஸாப், வி.ஜே. ஹண்ட், மெகந்தி, பிளாக் அண்ட் டாக்கில், மீம்ஸ் கிரியேஷன், பாடி லாங்குவேஜ், சேனல் சர்ஃபிங், குரூப் டான்ஸ், ஃபேஷ் பெயிண்டிங், பிரைடல் மேக்கப், ட்ரெஸ்ஸர் ஹண்ட், ஃபிரி ஸ்டைல் பேட்டில் முதலான போட்டிகளில் கலந்துகொண்டனர். 3500 மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் பங்குகொண்ட  நிறைவு விழாவினைத் தலைமையேற்று நடத்திய கல்லூரி இயக்குநர் டாக்டர். சூசன் மார்த்தாண்டன் இதுபோன்ற கலைத் திருவிழாக்களைப் பயன்படுத்தி மாணவர்கள்  தங்களின் தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியுமென்றார். சிறப்பு விருந்தினராக "திரைப்பட நடிகை" "பிக்பாஸ் புகழ்" யாசிகா ஆனந்த் கலந்துகொண்டு பேசுகையில் மாணவர்கள் மனதுக்குப் பிடித்தவற்றை செய்ய வேண்டும் என்றார். துணை இயக்குநர் முனைவர் வி.ஜெ. பிலிப், முதல்வர் முனைவர் சீ. திருமகன், துணை முதல்வர் சாமுவேல் சம்பத்குமார் முன்னிலையில் நடைபெற்ற விழாவை புல முதன்மையர் ஏஞ்சலின் கிறிஸ்டோபர்   நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். விஜய் டிவி "கலக்கப்போவது யாரு புகழ்" மணிமேகலை  தொகுத்து வழங்கினார். 1,00,000 பரிசுத்தொகை மாணவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. அதிக புள்ளிகள் பெற்று எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி வெற்றிக்கோப்பையைக் கைப்பற்றியது. இரண்டாமிடத்தைத் எஸ்.டி.என்.பி கல்லூரி தட்டிச்சென்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.


தமிழ் சுடர் ஆன்லைனில்...


செய்திகள்- உத்தமன் மாவட்ட செய்தியாளர்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image