அவிநாசியில் கண்டெய்னர் லாரியும், கேரளா பேருந்தும்  நேருக்கு நேர் மோதி விபத்து பலி  எண்ணிக்கை 20 ஆக உயர்வு போலிசார் விசாரணை..

அவிநாசியில் கண்டெய்னர் லாரியும், கேரளா பேருந்தும்  நேருக்கு நேர் மோதி விபத்து பலி  எண்ணிக்கை 20 ஆக உயர்வு போலிசார் விசாரணை..


திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே, கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், கர்நாடக மாநிலம்  பெங்களூரிலிருந்து கேரளா மாநிலத்தின்  தலைநகர்  திருவனந்தபுரத்தை  நோக்கி கேரளா மாநில அரசுக்கு சொந்தமான சொகுசு பேருந்து பயணிகளைக் ஏற்றிக்கொண்டு   சென்று கொண்டிருந்தது.‌ அப்போது  கோவையிலிருந்து சேலம் நோக்கி தனியாருக்கு சொந்தமான  டைல்ஸ் கற்கள் ஏற்றிக்கொண்டு  சென்ற கண்டெய்னர் லாரியும் தீடீரென  கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் அதிவேகமாக  மோதிக்கொண்டன இந்த கோர  விபத்தில் பேருந்தின் ஓட்டுனர்  உட்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக  உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவினாசி போலிசார் மற்றும் பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சொகுசு பேருந்தில்  மொத்தம் 48 பேர் பயணித்துள்ளனர். இவர்களில் 25 பேர் பலத்த காயங்களுடன்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த கோர விபத்து தமிழக- கேரளா மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.


tamilsudarr.page.


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image