தமிழ்நாட்டில் கொடுக்க வேண்டிய மனுவை மத்திய அமைச்சர்களிடம் கொடுத்த திமுக எம்பி   அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.

தமிழ்நாட்டில் கொடுக்க வேண்டிய மனுவை மத்திய அமைச்சர்களிடம் கொடுத்த திமுக எம்பி   அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.



தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பர் தி.மு.க-வைச் சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியன். இவர் சில தினங்களுக்கு முன்பு மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து, தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலை, ராஜிவ் காந்தி தகவல் தொழில்நுட்ப சாலையில் உள்ள டோல் பிளாசாக்களை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.இதுதான் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இரண்டு சாலைகளும் மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தால் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது கூட தெரியாத திமுக எம்பி  மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். இதனால்  தமிழச்சியை கேலி   கிண்டல் செய்து பல மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில்  வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இனிமேல் இதுபோன்ற  கோரிக்கை மனு அளிக்கப்போவதற்கு முன்பு திமுகவில் உள்ள மூத்த கட்சி நிர்வாகிகளிடம்   கலந்து பேசி செயல்படும்படி தமிழச்சிக்கு திமுக தலைமை கழகத்தில் இருந்து  உத்தரவு வந்துள்ளதாம். எல்லாம் காலம் செய்த கோலம் என்று எதிர்கட்சியினர் நக்கல் நையாண்டி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..


செய்தி- கோவி. சரவணன்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image