பேரனாக நினைத்து தான் செருப்பை கழற்ற சொன்னேன் இதில் பெரிய தவறில்லை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்.


பேரனாக நினைத்து தான் செருப்பை கழற்ற சொன்னேன் இதில் பெரிய தவறில்லை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்.


நீலகிரி:-


பழங்குடியினர் சிறுவனை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது காலில் இருந்த செருப்பை கழற்ற சொன்னதால் பெரும் பரபரப்பு நிலவியது.


முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் நலவாழ்வு முகாமை தொடங்கி வைப்பதற்காக  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்றிருந்தார்.


அந்த விழாவிற்கு செல்வதற்கு முன் அங்கிருந்த பழங்குடியினர் சிறுவனை அழைத்து வாடா வந்து என் செருப்பை என்று கூறி தனது செருப்பை கழற்ற சொன்னதால் பழங்குடியின மக்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.


இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.பலரும் இதனை மனித உரிமை மீறல் என்று கூறி தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 


சம்பவம் நடந்தபோது அமைச்சருடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர்  இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து  பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ‘என்னுடைய பேரன் போல் நினைத்துதான் செருப்பை  கழற்ற சொன்னேன், இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை.


செருப்பு பக்கிளை கழட்டிவிடு என்று சொன்னதில் பெரிய தவறு இல்லை என்று நான்  நினைக்கிறேன்' என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..‌


செய்தி- சிறப்பு செய்தியாளர்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image