திருச்சி அருகே பெண் காவலரை வீடியோ எடுத்து டிக் டாக் செய்த 19 வயது சிறுவன் கைது..
திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் இம்மாதம் 16 ம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சமயபுரம் காவல்நிலையத்தில் பணியாற்றிய 23 வயதான பெண் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். பாதுகாப்பு பணி முடித்து விட்டு அப்பகுதியில் நடந்து சென்ற பெண் போலீஸை ஒரு சிறுவன் செல் போனில் வீடியோ எடுத்தது தெரியவந்தது. அந்த வீடியோவை தனது செல்போன் மூலம் டிக்டாக் செய்து வெளியிட்டுள்ளான் சிறுவன்.
டிக் டாக் வெளியானது குறித்து பாதிக்கப்பட்ட பெண். போலீஸார் லால்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்த தின் பேரில் , அவனது செல்போன் டிக்டாக் முகவரி எண்ணை வைத்து புலன் ஆய்வு செய்த தில் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பெரியார்நகரைச் சேர்ந்த தம்பிராஜ் மகன் சுபாஷ்கண்ணன் வயது 19 என்பது தெரிய வந்த து..
IPC 4 of Women Harassment Act 66 C IT Act வழக்கு பதிவு செய்து, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் அவர்களின் உத்தரவின் பேரில் லால்குடி காவல்உதவி ஆய்வாளர் தங்கவேல் அவர்களின் தலைமையிலான தனிப்படையினர் இன்று மதுரை சென்று மேற்கண்ட சுபாஷ் கண்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
tamilsudarr.page
செய்தி- கோவி. சரவணன்...