காஞ்சிபுரம் அருகே  முட்புதரில் இழுத்து செல்லப்பட்ட மாணவி வடமாநிலத்தவர் 13 பேர் அதிரடியாக கைது.

 


காஞ்சிபுரம் அருகே  முட்புதரில் இழுத்து செல்லப்பட்ட மாணவி வடமாநிலத்தவர் 13 பேர் அதிரடியாக கைது.


பிளஸ் 2 மாணவியை முட்புதருக்குள் இழுத்து சென்ற வட மாநில இளைஞரால் பரபரப்பு. வடமாநிலத்தவர் 13 பேரை பிடித்து செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் பெருந்தண்டலம் கிராமத்தில் வசித்து வருபவர் நட்ராஜ். இவருடைய மகள் ஆனந்தி . செங்கல்பட்டு நகரத்தில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளிக் கூடம் முடிந்து செங்கல்பட்டு திருப்போரூர் செல்லும் பேருந்தில் ஏறி முள்ளிபக்கம் என்ற கிராமத்தில் இறங்கி அங்கிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தன்னுடைய கிராமமான பெருந்தண்டலம் கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் EXRUP என்ற பெயரில் இரண்டு 10 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள் . அவ்வழியே நடந்து சென்ற ஆனந்தியை அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமானப்பணி செய்யும் வடமாநில இளைஞர் ஒருவர் ஆனந்தியின் கையை பிடித்து முட்புதருக்குள் இழுத்து சென்றுள்ளான். அதிர்ச்சியுற்ற ஆனந்தி கூச்சலிட்டதை கண்டு அவ்வழியே சென்ற இளைஞர் ஒருவர் ஓடிச்சென்று ஆனந்தியை மீட்டு பெருந்தண்டலம் கிராமத்தில் ஒப்படைத்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.


இதனை கேட்டு ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் வடமாநிலத்தவர் தங்கி இருந்த டெண்ட்களை உடைத்து சேதப்படுத்தினர். மேற்படி நபரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு கோஷமிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுக்கா காவல்துறையினர் 13 வடமாநிலத்தவர்களை பிடித்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். பள்ளிக்கூட மாணவியை வடமாநில இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.


செய்தி- கோவி. சரவணன்-


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image