திமுகவில் நீயா- நானா பதவி சண்டை உ பிகள் மத்தியிலும் கோஷ்டி மோதல்  சேலத்தில் பரபரப்பு.

திமுகவில் நீயா- நானா பதவி சண்டை உ பிகள் மத்தியிலும் கோஷ்டி மோதல்  சேலத்தில் பரபரப்பு.



சேலம் மாவட்ட பொறுப்பாளர் பதவி பிடுங்கப்பட்ட விரக்தியில் வீரபாண்டி ராஜா இருந்து வரும் நிலையில், ஆதரவாளர்கள் புடைசூழ மேற்கு மாவட்ட பொறுப்பாளராக டி.எம். செல்வகணபதி பதவியேற்றுள்ளார். கட்சிக்குள் டி.எம்.எஸ். – ராஜா ஆதரவாளர்கள் இடையே முட்டல் மோதல் தொடர்வது, அவரது பதவியேற்பு விழாவிலும் வெளிப்பட்டது.


அண்மையில், சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகளை கட்சித் தலைமை அண்மையில் மாற்றியமைத்தது. அதன்படி, சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக டி.எம்.செல்வகணபதி நியமிக்கப்பட்டார். இதுவரை சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரக இருந்து வந்த வீரபாண்டி ராஜா, அந்த பதவியில் இருந்து விடுக்கப்பட்டு, திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக நியமிக்கப்பட்டார்.


ஒரு காலத்தில் சேலத்தில் கோலோச்சி வந்த வீரபாண்டியாரின் வாரிசான ராஜாவிடம் இருந்த மாவட்ட பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டதுடன் ஒப்பிசப்பில்லாத ஒரு பதவியை கொடுத்துவிட்டதாக, அவரது ஆதரவாளர்கள் குமுறினர்; தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். வீரபாண்டி ராஜாவும், கட்சித் தலைமை கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. இது ஒருபக்கம் இருக்க, சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட டி.எம்.செல்வகணபதி தனது ஆதரவாளர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில், புதிய பொறுப்பை ஏற்றிருக்கிறார். அத்துடன், வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கும் மாலை அணிவிக்கும் நிகழ்வுக்கு சென்றார். அங்கும் கோஷ்டி கானம் ஒலித்தது. செல்வகணபதி ஆதரவாளர்கள் ராஜாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியது, அங்கு நிலவும் கோஷ்டிப்பூசலை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. பாடுபட்டு கலைஞரும், வீரபாண்டியாரும், ஸ்டாலினும் சேலத்தில் திமுகவை வளர்த்தனர்; அதை அழிக்க யாரு நினைத்தாலும் அழிவு அவருக்குதான் என்று டி.எம்.எஸ். ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர்.
ராஜாவை மறைமுகமாக குறிப்பிட்டு எழுப்பப்பட்ட இந்த கோஷங்களை கேட்டு, அங்கிருந்த மூத்த நிர்வாகிகள் சிலரே சங்கடத்தில் நெளிந்தனர். அதேபோல், டி.எம்.எஸ். பதவியேற்பு நிகழ்ச்சியை வீரபாண்டி ராஜா புறக்கணித்தார்; தனது தந்தையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்காவது அவர் வருவார் என்று சேலம் திமுக நிர்வாகிகள் நம்பினர்; ஆனால், வெறுப்பின் உச்சத்தில் உள்ள ராஜா, அதை காட்டும் வகையில் இதிலும் கலந்து கொள்ளவில்லை. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வந்து கொண்டிருக்க, தமிழக முதல்வரின் சொந்த மாவட்டத்தில் திமுகவின் நிலை பரிதாபமாக உள்ளது. அங்கு வலுத்து வரும் கோஷ்டிப்பூசல், உடன் பிறப்புகளை கவலையடைய செய்துள்ளது. இதையெல்லாம் அமைதியாக பார்த்து கொண்டிருக்கும் தளபதியின் அடுத்த மூவ் எப்படியிருக்குமோ என்பதுதான் மாங்கனி நகர திமுகவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..

tamilsudarr.page.


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image