துணை முதல்வர் உட்பட 11 எம்எல்ஏக்கள் தலை தப்பியது தகுதி நீக்கம் வழக்கு முடித்துவைப்பு. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்
இந்த விவகாரத்தில் சபாநாயகர் உரிய முடிவெடுப்பார் என்று நம்புவதாகக் கூறி, வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.
சபாநாயகர் நடவடிக்கை எடுக்க கால வரம்பு நிர்ணயிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் ஓபிஎஸ்வின் துணை முதல்வர்பதவி மற்றும் மாபா பாண்டியராஜன் அமைச்சர் பதவி உட்பட 9 எம்எல்ஏக்கள் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி யின் ஆட்சி தப்பியது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி. சரவணன்...