திருப்பத்தூர் அருகே  108 ஆம்புலன்ஸ் விபத்து 5க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்.

திருப்பத்தூர் அருகே  108 ஆம்புலன்ஸ் விபத்து 5க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்...


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாலனங்குப்பம் கூட்டு ரோடு பகுதியில் ஜோலார்பேட்டை போலிசார் வாகன தணிக்கை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது  இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை போலிசார் துரத்திப் பிடிக்க முற்பட்டபோது. திருப்பத்தூரில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி அதிவேகமாக வந்த 108 ஆம்புலன்ஸ் திடீரென இருசக்கர வாகனம் ஓட்டி மீது மோதாமல் இருக்க ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரேக் அடித்துள்ளார். இதில் நிலை குலைந்த 108 ஆம்புலன்ஸ் அருகில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பயணிகள் மீது குப்புற கவிழ்ந்து  விபத்திற்குள்ளானது. இதனையடுத்து அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சுமார் 5க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகன தணிக்கையின் போது வாகன ஓட்டியை பிடிக்க முற்பட்டபோது ஏற்பட்ட விபத்து அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும்  சோகத்தையும் மற்றும் அச்சத்தையும்  ஏற்படுத்தி உள்ளது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.


தமிழ் சுடர் ஆன்லைனில்..


செய்தி- கோவி.சரவணன்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image