குடியுரிமை திருத்த சட்டத்தில்  இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு உள்ளது என்று நிரூபித்தால் 10 லட்சம் பரிசு. வேலூர் இப்ராகிம் அறிவிப்பு..

குடியுரிமை திருத்த சட்டத்தில்  இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு உள்ளது என்று நிரூபித்தால் 10 லட்சம் பரிசு.
வேலூர் இப்ராகிம்...


தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள எந்த ஒரு முஸ்லிம் நபருக்கும், எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பது உறுதியாக தெரிந்த பிறகும், சில முஸ்லிம்  அமைப்புகளும், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி  போன்ற எதிர் கட்சிகள் அப்பாவி முஸ்லிம்களை தூண்டிவிட்டு போராட்டம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்  மக்களை  அழிக்கும் செயல்  தற்போது  அரங்கேறி  வருகிறது.


இதுகுறித்து  வேலூர் இப்ராஹிம் கூறுகையில்.‌


தமிழகத்தில்  இருக்கக்கூடிய முஸ்லிம் அமைப்புகள் குறிப்பாக எஸ்.டி.பி.ஐ, பி.எப்.ஐ, த.மு.மு.க, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போன்ற  இன்னும் என்னென்ன  கட்சிகள் எல்லாம் இருக்கின்றனவோ அவை  அனைத்து அமைப்புகள் மற்றும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்யும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு  நான் ஒரு பகிரங்க சவால் விடுகிறேன். இந்தியாவில்  யாராவது ஒரு இஸ்லாமிய அமைப்பின் தலைவர் சி.ஏ.ஏ என்று சொல்லக்கூடிய தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் இந்திய இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று 10 காரணங்களை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஐந்து காரணங்களை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு காரணங்களைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஒரே ஒரு காரணத்தை சொல்லட்டும். இந்த குடியுரிமை  சட்டத்தில், இந்த சரத்தில், இந்த பகுதியில் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முஸ்லிம்களை பிரித்து காட்டுகிறது. முஸ்லிம்களின் குடியுரிமையைப் பறிக்கிறது என்று ஒரே ஒரு காரணத்தை சொன்னால், 10 லட்சம் ரூபாயை நான் அவர்களுக்கு தருகிறேன். இது எனது சவால்.
உங்களின் பக்கம் நானும் சேர்ந்து கொண்டு, இஸ்லாமிய அமைப்புகள் போடுகின்ற மேடையில் நின்று பாஜகவை எதிர்த்து பேச தயாராக உள்ளேன் என்று பொது கூட்டத்தில் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.


தமிழ் சுடர் ஆன்லைனில்..


tamilsudrr.page.


 


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image