திமுக- அதிமுக இரண்டும் ஒன்னு செருப்பு விசயத்தில் என புலம்பும் அரசியல் நிபுணர்கள் கருத்து.


திமுக- அதிமுக இரண்டும் ஒன்னு செருப்பு விசயத்தில் என புலம்பும் அரசியல் நிபுணர்கள் கருத்து.


சென்னை:


அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காலணியை சிறுவனை வைத்து கழட்டிவிட்ட விவகாரம் ஒரு பக்கம் இருக்க… ஸ்டாலினின் காலில் ஒரு 70 வயது பெரியவரை செருப்பு மாட்டும் போட்டோ வைரலாகி உள்ளது.


வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பழங்குடியின மாணவர் ஒருவரை அழைத்து தமது செருப்பை கழற்ற வைத்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை அரசியல் வட்டாரங்களில் ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல எதிர்க்கட்சிகள் விமர்சன வேட்டையை ஆரம்பித்தன. ஆளும் அமைச்சரான ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஆதரவாக பேசினார். இப்போது நமது அம்மா நாளிதழும் ஆதரவாக செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: அடிப்படையில் வெள்ளந்தியாக பேசக்கூடிய மனிதர் திண்டுக்கல் சீனிவாசன். அவர் தன் செருப்பைக் கழற்ற உதவி கேட்ட செயல் தவறானது அல்ல. இதனை தொலைக்காட்சிகள் பெரிதாக்கி அமைச்சரை மட்டுமல்ல, அவருக்கு பரிவோடு உதவிய அந்த சிறுவனையும் இழிவுபடுத்திவிட்டன என்றும் தெரிவித்து உள்ளது. மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு 70 வயது பெரியவரை செருப்பு மாட்ட வைக்கும் ‘இந்த படத்தை ஊடகங்கள் யாராவது பெரிதாகக் காட்டுவார்களா? என்றும் கேள்வி எழுப்பிய ஒரு படத்தையும் வெளியிட்டிருந்தது. அந்த படம் இப்போது வைரலாகி இருக்கிறது. ஸ்டாலினின் செயல்பாடு எப்படி சரியாகும் என்றும் டுவிட்டராட்டிகள் குறுக்கும், மறுக்கும் விமர்சனங்களை எழுப்பி அதகளம் பண்ணி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.


செய்தி- சிறப்பு செய்தியாளர்..


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image