ஆம்பூர் அருகே மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்த இளைஞர்கள்..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த
அபிகிரிபாபட்டறை பகுதியில் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து 9 அடி நீள கொண்ட மலைப்பாம்பு ஊருக்குள் வந்துள்ளது. இதனை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறை அதிகாரிகள் வருவதற்குள் அந்த மலைப்பாம்பை வேறு எங்கும் சென்றுவிட கூட என்ற நோக்கில் அப்பகுதி இளைஞர்கள் பல்வேறு கட்ட முயற்சிக்கு பின்பு மலைப்பாம்பை பிடித்தனர். அதன்பின் இளைஞர்கள் தங்களின் வீரத்தின் அடையாளம் தாங்கள் தோள்களில் 9 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை வைத்து தங்கள் செல்போன்களில் படம் பிடித்த காட்சி அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனக்காப்பாளர்கள் ராஜ்குமார் மற்றும் ஞானவேல் இருவரும் மலைப்பாம்பை பிடித்து அருகே உள்ள காரப்பட்டு காப்புக் காட்டில் விட்டனர். இரவு நேரத்தில் காட்டு பகுதியில் இருந்து மலைப்பாம்பு ஊருக்குள் அடிக்கடி வருவதால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது என அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
செய்தி- கோவி.சரவணன்...