திருச்சியில் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்.
திருச்சி சங்கம் ஹோட்டலில் நடைபெற்ற மக்கள் நீதி மைய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கிராம சபை விழிப்புணா்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு கட்சி நிா்வாகிகள் பணியாற்ற வேண்டிய பல்வேறு வழிமுறைகள் குறித்து பேசினார். இந்த கூட்டங்களில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி மண்டலங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனர். மக்கள் நீதி மையம் கட்சிக்கு ஏற்கனவே சென்னை ஆழ்வாா்பேட்டையில் தலைமை அலுவலகமும், பொள்ளாச்சியில் இரண்டாவது தலைமை அலுவலகமும் உள்ளது. இதன் தொடா்ச்சியாக மேலும் 3ஆவது தலைமை அலுவலகம் திருச்சி திருவெறும்பூா் பெல், கணேசபுரம் பகுதியில் தலைமை அலுவலகத்தை கமல்ஹாசன் திறந்து வைத்தார்.