வேலூர் கோட்டையில் காதலன் கண் முன்னே கதற கதற காதலி கத்திமுனையில் காம வெறியர்களால் கற்பழிப்பு. போலீசார் விசாரணை..
வேலூர் என்றாலே வெயிலுக்கு பெயர் போன ஊர் அனைத்து தரப்பு மக்களாலும் அழைக்கப்படுகிறது. அதையும் தாண்டி வரலாற்றுக்கு புகழ் பெற்ற ஊர் வேலூர். இந்திய சுதந்திர வரலாற்றில் தனக்கென தனி ஒரு இடம் வகுத்த வேலூர் கோட்டையில் சிப்பாய் புரட்சி வெடித்து இந்திய சுதந்திரத்திற்கு முதலில் வித்திட்ட பெருமைமிக்க வேலூர் கோட்டை இன்று பல்வேறு இன்னல்களால் தனது பெருமையை சிறிது சிறிதாக இழந்து வருகிறது. அந்த பெருமை மிக்க வேலூர் கோட்டை பகுதியில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் என கூட்டம் அலைமோதும் குறிப்பாக மற்ற நாட்களில் மாலை நேரத்தில் காதல் ஜோடிகளை பரவலாக பார்க்க முடியும். அங்கு வரும் ஒரு சில காதல் ஜோடிகள் செய்யும் செயல்கள் மற்றவர்களை முகம் சுளிக்கும் வகையில் நடந்து வருகிறது. இப்படி ஒரு தருணத்தில் கோட்டைக்கு சென்ற ஒரு காதல் ஜோடியை வழிமறித்து காதலனை சரமாரியாக தாக்கிய மர்ம கும்பல் காதலன் கண்முன்னே கத்திமுனையில் காதலியை கதற கதற கற்பழித்துள்ளனர். பின் அப்பெண் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் செல்போன் போன்றவற்றை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து யார் அந்த காதல் ஜோடி? வேலூர் கோட்டையில் எந்த பகுதியில் அவர்கள் இருந்தனர்? யாரெல்லாம் அவர்களைப் பின்தொடர்ந்தனர்? இது திட்டமிட்ட ஒன்றா அல்லது யாரும் இல்லாததை கண்டு கயவர்கள் இவ்வாறு நடந்து கொண்டுள்ளனரா என பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருந்தபோதிலும் காதலன் கண்முன்னே காதலியை கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்ததும், தான் அணிந்திருந்த நகைகளையும் பறித்து சென்றதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கும்போது,வேலூர் கோட்டைக்கு காதல் ஜோடிகள் வருவது வழக்கம். கோட்டையில் சற்று தூரமான பகுதிக்கு செல்வதும்... உயரமான பகுதிக்கு சென்று பெரும் கற்கள் மற்றும் பாறைகளுக்கு அருகில் அமர்ந்து காதல் ஜோடிகள் செய்யும் அநாகரீகமான செயல்கள் வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க வரும் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்டு வருவது மிகவும் வேதனையான செயலாகும். இந்த ஒரு சம்பவம் அனைவருக்கும் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமையும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
செய்தி ஆக்கம். சென்னை பதிப்பகம்..