நானும் கருணாநிதியின் மகன் தான். காலங்கள் மாறும் அப்போது காட்சியும் மாறும் முக அழகிரி  அதிரடி பேச்சு.அதிர்ச்சியில்  திமுக நிர்வாகிகள்.


நானும் கருணாநிதியின் மகன் தான். காலங்கள் மாறும் அப்போது காட்சியும் மாறும் முக அழகிரி  அதிரடி பேச்சு... அதிர்ச்சியில்  திமுக நிர்வாகிகள்.


ஒரு காலத்தில் தென் மண்டல திமுகவின் மையமாக செயல்பட்டவர் மறைந்த முன்னாள் முதல்வரின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சரும்  தென் மாவட்டங்களில்  அஞ்ச நெஞ்சன் என்ற திமுக தொண்டர்களால் அழைக்கப்பட்ட  மு.க.அழகிரி. சில காரணங்களால் திமுகவில் இருந்து அப்போதைய திமுக தலைவரும் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால்  அதிரடியாக நீக்கப்பட்டார். இதனையடுத்து, திமுகவில் சேருவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தபோதும் அவரை சேர்த்துக்கொள்ளவில்லை. இதனையடுத்து, கருணாநிதி மறைவை அடுத்து அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை அறவே தவிர்த்து வந்த  அழகிரி.  இந்தாண்டும் எந்த ஏற்பாடும் வேண்டாம் என மிக உறுதியாக தனது விசுவாசி  மதுரை முன்னாள் துணை மேயர் மன்னனிடம் கூறிவிட்டார்.


இந்நிலையில், மதுரையில் அழகிரியின் தீவிர ஆதரவாளரும் வழக்கறிஞர் சங்கத் தலைவருமான மோகன்குமார் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில், மு.க.அழகிரியும் அவரது  மனைவி காந்தி அழகிரியும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.


அதன்பின்  விழாவில் பேசிய முக அழகிரி...


  ஒருவர் மட்டுமே கருணாநிதியின் மகன் அல்ல, நானும் கருணாநிதியின் மகன் தான் என்றார். இந்த காலத்தில் நன்றி மறந்து நடந்துகொள்வது மிக எளிதாகிவிட்டது. அதற்கு  நானே உதாரணம் என்றார். குறிப்பாக
பொது இடங்களில் அதிமுகவினர் என்னை எங்கேயாவது பார்த்தால் நின்று அண்ணா எப்படி இருக்கிறார்கள் என்று நலம் விசாரிக்கிறார்கள் அன்பாக  பேசுகின்றனர். ஆனால், உடன் பழகிய திமுவினர் என்னை கண்டுகொள்வதில்லை. மேலும், தன்னை பற்றி எல்லோருக்கும் நன்றாக  தெரியும் என்றும், இந்த நிலை எப்போது மாறும் எனவும் தமக்கு நன்றாக தெரியும் எனவும் அழகிரி பொடி வைத்துப் பேசினார். திருமண விழாவை முடித்த மு.க.அழகிரி நேராக மதுரை விமான நிலையம் சென்று சென்னையில் உள்ள மகன் இல்லத்திற்கு புறப்பட்டு சென்றுவிட்டார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் முக அழகிரியின் இந்த பேச்சு அவரால் திமுகவில் பல பேர்கள் பதவி சுகம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் தற்போது திமுகவின் முக்கிய பொறுப்பில் பதவி ஏற்றுள்ள நபரும் ஆவார் என திமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image