இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களின் கலாச்சாரங்களை நாம்  தெரிந்து கொள்ள வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு.

இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களின் கலாச்சாரங்களை நாம்  தெரிந்து கொள்ள வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு..


மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சகத்துடன் நேரு யுவகேந்திரா சார்பில் மதுரை மாவட்டத்தில் ஜனவரி 24 முதல் 28 ஆம் தேதி வரை தேசிய ஒருமைப்பாட்டு முகாம் நடைபெற்று வருகிறது, இம்முகாமில் திரிபுரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, மகாராட்டிரா உள்ளிட்ட 16 மாநிலங்களில் இருந்து வந்துள்ள கலைஞர்கள் அந்ததெந்த மாநிலங்களுடைய கலாச்சார நிகழ்வுகளை பறை சாற்றும் விதமாக கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார்கள், அதன் ஒரு பகுதியாக மதுரை இரயில் நிலைய சந்திப்பில் நடைபெற்ற முகாமில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார், அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு அந்தந்த மாநிலங்களின் அடையாளமாக உள்ள தொப்பி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன, தேசிய ஒருமைப்பாட்டு முகாமினை தொடங்கி வைத்த பின்னர் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில் "தேசிய ஒருமைப்பாட்டு முகாமால் பிற மாநிலங்களின் கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள முடியும், மதுரையில் தமிழ் சங்கம் வளர்க்கப்பட்டது, மதுரை பல்வேறு வரலாற்று அடையாளங்களை கொண்டது, மகாத்மா காந்தி அறையாடை உடுத்தியது மதுரையில் தான் நிகழ்ந்தது" என பேசினார் மேலும்
தேசிய ஒருமைப்பாட்டு முகாமில் மேடையில் ஆடி பாடிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்


மதுரை இரயில் நிலைய சந்திப்பில் 16 மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் பங்கு பெற்ற தேசிய ஒருமைப்பாட்டு முகாம் நடைபெற்றது, முகாமினை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி
உதயகுமார் தொடங்கி வைத்தார், பின்னர் மேடையில் ஒவ்வொரு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினார்கள், பஞ்சாப் மாநில கலைஞர்கள் தங்களுடைய மாநில பாடலுக்கு நடனமாடி கொண்டு இருந்த பொழுது விழா ஏற்பாட்டாளர்களின் கோரிக்கை அடுத்து பஞ்சாப் மாநில பாடலுக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 1 நிமிடங்கள் நடனமாடினார், அமைச்சரின் நடனத்துக்கு பார்வையாளர் கை தட்டி ஆரவாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image