தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு கோலாட்டம்.. திருப்பத்தூர் அருகே கொண்டாடும் பெண்கள்..
தமிழரின் பாரம்பரிய விளையாட்டு பல உண்டு குறிப்பாக பொங்கல் திருநாள் காலங்களில் ஜல்லிக்கட்டு, காளை விடும் திருவிழா, சேவல் சண்டை, மாட்டு வண்டி பந்தயம், கரகாட்டம், மயிலாட்டம், போன்ற விளையாட்டுகளில் மிகவும் பிரபலமான விளையாட்டு கோலாட்டம். தற்போது நவீன தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக தமிழ் கலாசாரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் இன்றும் ஒருசில இடங்களில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு இன்றும் வெகுவாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் சின்ன கந்திலி கிராமத்தில் பொங்கல் திருநாள் விழா ஒரு வார காலத்திற்கு வெகு சிறப்பாக நடைபெறுகிறது. குறிப்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாரம்பரிய விளையாட்டு நடைபெறுகிறது. கடைசி நாள் விழாவாக கோல் ஆட்டம் வெகு சிறப்பாக 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு கோலாட்டம் முக்கிய தெருக்கள் வழியாக ஆடி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..