ஏலகிரி மலையில் தனியார் தீம் பார்க் நீச்சல் குளத்தில் சிறுவன் தவறி விழுந்து பலி சுற்றுலா வந்த இடத்தில் சோகம். 

தனியார் தீம் பார்க் நீச்சல் குளத்தில் சிறுவன் தவறி விழுந்து பலி சுற்றுலா வந்த இடத்தில் சோகம். 


       காஞ்சிபுரம் மாவட்டம் செம்மரபாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன் தொழிலதிபர். இவருக்கு பொன்னி என்ற மனைவியும் ருத்ரா(10),ரோஷன்(6). என இரு பிள்ளைகள் உள்ளனர். ரோஷன் செம்மரபாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல முடிவெடுத்தனர். அதன்படி திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி மலைக்கு தனது குடும்பம் மற்றும் நண்பர் குடும்பத்துடன்  ஏலகிரி மலைக்கு காரில் வந்தனர். ஏலகிரி மலையில் உள்ள தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கினர். பின்னர் நேற்று மாலை 
சுற்றுலா முடித்து விட்டு மீண்டும் காஞ்சிபுரம் செல்வதற்காக தாயாரானார்கள். பின்னர்  இறுதியாக அத்தனாவூரில் உள்ள தனியார் தீம் பார்க்கிற்க்கு சென்றனர் அப்போது ஜானகிராமன் மகன் ரோஷன்(6). தனியார் தீம் பார்கில் உள்ள நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.  அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். அப்போது திடீர் மாயமான ரோஷனை அக்கம்பக்கத்தில் தேடியபோது ரோஷன் நீரில் மூழ்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் தகவலறிந்த ஏலகிரி மலை போலீசார் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்த சிறுவன் ரோஷன் உடலை  மீட்டு  பிரேத பரிசோதனைக்காக திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்  இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மலர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தனியார் தீம் பார்க்கின் மேனேஜர் பெருமாளை கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள தீம் பார்க்கின் உரிமையாளர் ஹரி ஆனந்தை தேடி வருகின்றனர்.
முன்னதாக திருப்பத்துார் எஸ்பி விஜயகுமார் டிஎஸ்பி தங்கவேலு மற்றும் போலீசார் அங்கு சென்று தனியார் தீம் பார்க்கை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image