நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் நீதிமன்ற தூய்மைப் பணியில் இறங்கிய புதுக்கோட்டை முதன்மை நீதிபதி.
புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தை தூய்மைப்படுத்தும் விதமாக இன்று நீதிமன்றப் பணியாளர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நீதிபதிகள் அனைவரும் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இங்கு நீண்ட காலமாக தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றும் விதமாகவும் காலை 9 மணி முதல் மாலை வரை நடக்கும் எனவும் தெரிவித்துள்ளனர் இதில் புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி NNS மாணவர்களும் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் அவர்கள் தூய்மை செய்யும் பணியை தொடங்கி வைத்து தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மேலும் அரசு வழக்கறிஞர் வெங்கடேஷ், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜீவா. சுப்பிரமணியன், மற்றும் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோர் பணியில் ஈடுபட்டனர்.