ஏலகிரி மலையில் அழுகிய நிலையில் மின்சார ஊழியர்கள் சடலமாக மீட்பு. கொலையா அல்லது தற்கொலையா போலீசார் விசாரணை..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பகுதியை சேர்ந்த ஆனந்தன் மகன் முத்துக்குமார்(30) இவர் ஜோலார்பேட்டையில் மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அன்று பணியின் காரணமாக தனது நண்பருடன் ஏலகிரி மலைக்கு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து முத்துக்குமாரின் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில். வாணியம்பாடி நகர காவல் நிலையத்திலும் மற்றும் ஏலகிரி மலை காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர். புகாரின்பேரில் பல இடங்களில் தேடி வந்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் ஏலகிரி மலையின் இரண்டாவது வளைவில் அழுகிய நிலையில் முத்துகுமார் சடலமாக மீட்கப்பட்டார். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலிசார் முத்துகுமார் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணிக்குச் சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.