சிதம்பரத்தில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை..
கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற நிகழ்ச்சியில் சிதம்பரம் காந்தி சிலையில் இருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டு அண்ணாமலை நகரில் உள்ள மொழிப்போர் தியாகி இராஜேந்திரன் சிலைக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம், கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பு.தா.இளங்கோவன், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் மாரிமுத்து, மாவட்ட கழக அவைத்தலைவர் எம்.எஸ்.என்.குமார், நகர கழக செயலாளர் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் முருகையன், முன்னாள் நகர கழக செயலாளர் தோப்பு சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன், கழக அமைப்பு செயலாளரும் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினருமான என்.முருகுமாறன் ஆகியோர் மாலை அணிவித்து மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கங்களை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன், ஒன்றிய குழு தலைவர்கள் கருணாநிதி, சிவப்பிரகாசம், மாவட்ட துணை செயலாளர் தேன்மொழி, மாவட்ட பாசறை செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், அமைப்பு சார ஓட்டுனரணி தேவநாதன், பேரூர் கழக செயலாளர்கள் மாரிமுத்து, ஆறுமுகம், ஆவின் தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் ஆவின் தலைவர் சுரேஷ்பாபு, சர்க்கரை ஆலை துணை தலைவர் விநாயகம், தலைமை கழக பேச்சாளர்கள் தில்லை கோபி, தில்லை செல்வம், சேகர், பொதுக்குழு உறுப்பினர் சிவ.சிங்காரவேலு, நிர்வாகிகள் தில்லை சேகர், யேசுராஜ், சக்திவேல், வீரமணி, உத்திராபதி, தங்க.கோபால், ஏ.ஜி.மனோகர், ராமு, ரகு, மணிபாரதி, சசிக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.