மருதமலை பிரதான சாலையில் பக்தர்களுக்கு வழி விடாமல் சாலையை மறைத்த ஒற்றை காட்டுயானை.
முருக பெருமானின் ஏழாவது படை வீடு என்றழைக்கப்படும் மருதமலை திருக்கோவிலுக்கு நடந்து வருகின்ற பக்தர்களுக்காக, 1008படிகட்டுகள் கொண்ட வழித்தடம் உள்ளது. இந்த படிகட்டுகளின் வழியாக குழந்தைகள், பெரியவர்கள், என ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினம் தினம் வந்து செல்வதுன்டு. அப்படி பக்தர்கள் நடந்து செல்லும் படிகட்டுகளின் நடுபாதையில் ஒற்றை யானை நின்றபடி இருப்பதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பக்தர்கள் அனைவரும் முருகா முருகா என மனமுருகி வேண்டினர் பின்னர் பக்தர்கள் சப்தமிட்டபடியே நடந்ததால் சில நிமிடங்களில் அந்த யானை காட்டுக்குள் சென்றது. அதற்குள்ளாக வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகளும் விரைந்து வந்தனர். அதற்குளாக யானை காட்டுக்குள் சென்றதால் பக்தர்கள் மீண்டும் தங்களது பயணத்தை மேற்கொண்டு முருக பெருமானினை தரிசனம் செய்தனர்.