சிறுமியிடம் சில்மிஷம் செய்த அரசு போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதகர் போக்சோ சட்டத்தில் கைது..
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்த மயிலாடியை சேர்ந்தவர் குருசாமி (58). இவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழகத்தில் செக்கிங் இன்ஸ்பெக்டராக(டிக்கெட் பரிசோதகராக) பணி செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடும்பத்துடன் வசிக்கும் 4ம் வகுப்பு படிக்கும் எட்டு வயது பள்ளி மாணவியை தனியாக அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனை பற்றி ஒன்றும் தெரியாத மாணவி இதுகுறித்து வீட்டில் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இதனை எப்படியோ அறிந்த மாணவியின் தாய் மாணவியின் கையில் சூடுவைத்து கேட்டுள்ளார். இதனால் மாணவி நடந்த சம்பவத்தை அப்படியே கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் போலீசார் குருசாமியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.