கேரள சட்டப்பேரவைத் தீர்மானம் சட்ட விரோதமானது - கேரள ஆளுநர்.
இந்திய குடியுரிமை திருத்த புதிய சட்டம் கடந்த ஆண்டு மத்திய அரசு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கொண்டு வந்து நிறைவேற்றியது. இந்த குடியுரிமை சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. குறிப்பாக உத்தரப் பிரதேசத்திலும் மேற்கு வங்காளத்திலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன இதில் ஒரு சில இடங்களில் வன்முறைகள் நடைபெற்றது. அதேபோல் தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். இந்நிலையில் கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசு சட்டப்பேரவையில் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கேரளாவில் நிறைவேற்றப் போவதில்லை எனக் கூறி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் ஒரு அறிக்கையில்.
இந்திய குடியுரிமைச் சட்டம் மத்திய அரசின் அதிகாரப்பட்டியலில் உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், சட்ட ரீதியாகவும் மற்றும் அரசியலமைப்பின்படி உள்ளது. எனவே மாநில அரசின் தீர்மானம் செல்லுபடியாகாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் கேரளம் என்பது குறிப்பிடத்தக்கது.