ஆம்பூர் அருகே பிரசவவலியால் துடித்த பெண்ணுக்கு வயல்வெளியில் பிரசவம் பார்த்து கிராம பெண்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுக்கா
கீழ் மிட்டாளம் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் அவருடைய மனைவி சோனியா இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மூன்றாவது முறையாக கருவுற்றிருந்தார். இவருக்கு இன்று காலை பிரசவ வலி எடுத்துள்ளது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தப் பெண்ணை பிரசவத்துக்காக 6 கி.மீட்டர் தொலைவில் உள்ள நரியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்துச்செல்லும் வழியில் சின்ன வரிகம் ஊராட்சிகுட்பட்ட ரகுநாதபுரம் அருகே பிரசவ வலி அதிகமானதால் அலறிய சோனியாவில் குரல் கேட்டு ஆம்புலன்ஸ் அங்கேயே நிறுத்தப்பட்டு அங்கு வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த பெண்கள் சோனியாவை கீழே இறக்கி வயல்வெளியில் படுக்க வைத்து சுற்றியும் அரனாக புடவைகளை பிடித்து பிரசவம் பார்த்துள்ளனர். பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் தற்போது நரியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு அங்கு நலமாக உள்ளனர்.
இந்த வீடியோ சமுக ஊடகங்களில் வெளியானது. இதை பார்த்த பொது மக்கள் கிராமத்து பெண்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.