திருப்பத்தூரில் பொது கழிப்பறைகளுக்கு தண்ணீர் வசதி இல்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியல். போக்குவரத்து பாதிப்பு..

திருப்பத்தூரில் பொது கழிப்பறைகளுக்கு தண்ணீர் வசதி இல்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியல். போக்குவரத்து பாதிப்பு..


திருப்பத்தூர் நகராட்சி சார்பில் கெளதம்பேட்டை பகுதியில் பொது கழிப்பறைகள் உள்ளன. இந்த கழிப்பறைகளுக்கு முறையான தண்ணீர் வசதி செய்துதர பல முறை நகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தும் மற்றும் நேரில் சென்று மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள், முதியோர்கள் என தீடீரென திருப்பத்தூர்- திருவண்ணாமலை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் நகராட்சி ஆணையர் வரும் வரை  நாங்கள் மறியல் போராட்டத்தை கைவிட மாட்டோம் எனக்கூறி காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின் நகராட்சி துப்பரவு அலுவலர் விமல் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பொதுமக்களின் கோரிக்கை படி விரைவில் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என  உறுதியளித்ததை அடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதனால்   பள்ளி- கல்லூரிகள், மற்றும் பொதுமக்கள், சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்  என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள். 


செய்தி- கோவி.சரவணன்..


tamilsudarr.page.


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image