சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி கரூரில் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி..
கரூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி இன்று கரூர் கோவை சாலையிலுள்ள பிரேம் மஹாலில் தொடங்கி வையாபுரி நகர், கரூர் பேருந்து நிலையம், ரவுண்டானா கடைவீதி வழியாக திருவள்ளுவர் மைதானம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு பிரம்மாண்ட நடைபயிற்சி பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சாலைகளில் வலம் வந்தனர்.
இந்நிகழ்ச்சியை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கரூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் கரூர் நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.