இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள பாஜக நிர்வாகிகள் தேர்வு.

குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவுப் பிரச்சாரம் - பொறுப்பாளர்களை அறிவித்தது பாஜக.


இந்திய குடியுரிமை  திருத்தச் சட்டத்திற்கு ஆதவான பிரச்சாரத்திற்கு மாநில வாரியான பொறுப்பாளர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளார்.


குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை எதிர்கொள்ள, வரும் 5 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நாடு தழுவிய ஆதரவு பிரச்சாரத்தை மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.  அதற்காக தமிழகம், புதுவை, கேரளம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கு ரவீந்திர ராஜு பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பலத்த எதிர்ப்பு நிலவும் மேற்கு வங்கத்திற்கு  ஹேமந்த் பிஸ்வ சர்மா மற்றும் ராகுல் சின்கா ஆகியோர் தலைமை வகிப்பார்கள் என அறிவிப்பு. இந்த பிரச்சாரத் திட்டம் மூலம் சுமார் 3 கோடி குடும்பங்களிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான பிரச்சாரம் சென்றடையும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சமூக வலைதளங்களில் பாஜக ஏற்கனவே தனது பிரச்சாரத்தை துவக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image