திருப்பத்தூர் மாவட்டத்தில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா. அமைச்சர்கள் கே.சி.வீரமணி மற்றும் நிலோபர்கபில் ஆகியோர் பங்கேற்பு.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் தொடக்க விழா திருப்பத்தூர் மீனாட்சி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது. இவ்விழாவில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் கலந்து கொண்டு 3 கோடியே 11லட்சம் ரூபாய் மதிப்பிலான 90796 மிதிவண்டிகளை வழங்கி தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட கல்வி அலுவலர் மார்ஸ், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டி.டி.குமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் தம்பா கிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் சலீம் மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள்,பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
tamilsudarr.page.