விருத்தாசலத்தில் தனியார் நிறுவனம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் மருத்துவ முகாம்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் அமைந்துள்ள செல்லம் & கோ மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக காவல் துணைக் கண்காணிப்பாளர் இளங்கோவன் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார். இதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கடலூர் மாவட்ட விற்பனை அதிகாரி கென்னடி மற்றும் பெரம்பலூர் செல்லம் மருத்துவமனை மருத்துவர் பிரபாகர், காரைக்கால் விநாயக மிஷின் மருத்துவக் கல்லூரி மருத்துவர் அருள்செல்வி, சாந்தினி, சுதா, நித்தியா, மருத்துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் காது, மூக்கு, தொண்டை மற்றும் பொது மருத்துவம் உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்..