குரும்பேரி அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடிய பொங்கல்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் குரும்பேரி கிராமத்தில் முன்னாள் முதல்வரும் தமிழகத்தின் கல்வி கண் திறந்த வள்ளல் என அழைக்கப்படும் காமராஜர் அவர்களால் உருவாக்கப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவர்கள் இன்று பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அதிலும் சென்னை, கோவை, பொங்களூரூ போன்ற பகுதிகளில் பணி புரிந்தாலும் வருடத்துக்கு ஒருமுறை தங்களது சொந்த ஊர்களுக்கு வருவது வழக்கமாக வைத்துள்ளனர். இதில் ஒரு சில நபர்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டு அங்கேயே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் திருவிழாவிற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்த நண்பர்கள் 24 ஆண்டுகளுக்கு பிறகு அனைவரும் ஒன்றிணைந்து தன்னுடன் படித்த பழைய நண்பர்கள் வீடுகளுக்கு சென்று குடும்பத்துடன் சிறப்பாக பொங்கல் திருவிழாவை கொண்டாடிய பின் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்ட தருணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதில் தங்களுக்கு கல்வி ஞானத்தை வழங்கிய ஆசிரியர்களை நினைவுகூர்ந்து இனிவரும் காலங்களில் ஆசிரியர்களுடன் இணைந்து இதுபோன்ற திருவிழாக்களில் பங்கேற்கும் வகையில் வழிவகை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்...