தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வெல்லப் போவது யாரு களநிலவரங்களை உங்கள் தமிழ்ச்சுடரில்..


சென்னை:


தமிழகத்தில் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்  கடந்த டிசம்பர்  மாதம் 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக  நடைபெற்றது. புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னையை சேர்த்து மொத்தம் 10 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் தேர்தல் நடந்தது.
91,975 ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள  இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட  இந்த தேர்தலில்   முதல்கட்ட தேர்தலில் 76.19 சதவீதமும், 2-ம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.தமிழகம் முழுவதிலும் உள்ள 315 மையங்களில் இந்த வாக்குப்பெட்டிகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன. காலை 8 மணிக்கு வாக்கு பெட்டிகள் அனைத்தும் பொதுவான வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டு, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.8 ரவுண்டுகளாக ஓட்டுகள் எண்ணும் பணி நடக்கும். ஓட்டுகளை பிரிக்கும் பணியே இன்று பிற்பகல்  1 மணிக்கு மேல் வரை ஆகும் என்று கூறப்படுகிறது. ஓட்டுகள் எண்ணும் பணியில் சுமார் 2 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, வீடியோவிலும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image