வேலூர் அடுத்த வடுகந்தாங்கல் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்.
வேலூர் மாவட்டம் கேவி குப்பம் அடுத்த வடுகந்தாங்கல் கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் தனியார் கண் மருத்துவமனை மற்றும் ரூசா மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை , பல் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை புற்றுநோய், வாய் புற்றுநோய், போன்ற மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவர்கள் அபர்ணா, நைனா, செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் சுமார் 150 பேருக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.