ஜோலார்பேட்டையில் தேசிய அளவிலான வளையபந்து போட்டியை அமைச்சர்கள் கே.சி.வீரமணி மற்றும் நீலோபர் கபீல் ஆகியோர் துவங்கி வைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பள்ளி கல்விதுறை சார்பில் தேசிய அளவிலான 65 வது வளைய பந்து விளையாட்டு போட்டி மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியிற்கு தமிழக வணிகவரி மற்றும் பத்திரபதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி போட்டியை தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் தமிழ்நாடு, குஜராத், பாண்டிசேரி, டெல்லி, ஆந்திரா,கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட 12 மாநிலத்திலிருந்து 14 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொள்கின்றனர்.
இதில் மாவட்ட பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.