பள்ளிக்கு பூட்டு போட்டு நூதன போரட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சசிகலா இவர் கணவரை இழந்தவர் இந்நிலையில் அப்பகுதியில் பள்ளியில் பணிபுரியும் பொழுது அவரது நடத்தையின் மீது குறை கூறி பள்ளிக்கு வரக்கூடாது என அப்பகுதியில் உள்ளவர்கள் முன்னதாக உதவி கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளனர் இதனால் அவர் தற்காலிக பணியிடை மாற்றமாக பக்கத்திலுள்ள திருமலைகுப்பம் பகுதியில் உள்ள பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்காலிக பணியிடை மாற்றம் முடிந்து இன்று பள்ளிக்கு திரும்பியபோது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பரிமேலழகன் எதற்காக பள்ளிக்கு வந்தீர்கள் என்று கேள்விகள் எழுப்பியதாக கூறப்படுகிறது பின்னர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமையில் அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை பள்ளியில் இருந்து வெளியேற்றுமாறு மாணவர்களை வெளியேற்றி பள்ளியை இழுத்து பூட்டி உள்ளனர். இதனால் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆம்பூர் வட்டாட்சியர் செண்பகவள்ளி மற்றும் அப்பகுதி உதவி தொடக்க கல்வி அலுவலர் திருப்பதி மாவட்ட கல்வி அலுவலர் செல்வராணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளியை வேலை நேரத்தில் பூட்டுவது குற்றச் செயல் என தெரிவித்து பின்னர் பள்ளியை திறந்து மாணவர்களை உள்ளே அனுப்பியுள்ளனர். இதனால் தொடர் விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பிய மாணவர்கள் காலை முதல் மாலை வரை தங்கள் வகுப்பு நேரத்தை வீணடிக்க நேர்ந்ததாக பெற்றோர்கள் புலம்பி சென்றனர்.