கடையநல்லூரில் தேசிய வாக்காளர் தின பேரணி மாணவர்கள் பங்கேற்பு.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் வாக்காளர் உரிமை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சி தலைவரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான அருண் சுந்தர் தயாளன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் வருவாய் துறையின் சார்பில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் நகராட்சி ஆணையர்கள், மற்றும் தேர்தல் பிரிவு ஊழியர்கள் மூலம் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் தொழிற்கூடங்களில் வாக்காளர் உரிமை தின உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.கடையநல்லூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் கம்பனேரி, புதுக்குடி பகுதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.கடையநல்லூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முதல் அச்சம் பட்டி வரை நடைபெற்ற வாக்காளர் உரிமை தின பேரணிக்கு தேர்தல் பிரிவு தாசில்தார் சரவணன் முன்னிலை வகிக்க வட்டாட்சியரும் உதவி தேர்தல் அலுவலருமானஅழகப்பராஜா தலைமை தாங்கி கொடி அசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் வருவாய் ஆய்வாளர்கள் முருகன் வீரலட்சுமி கடையநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் தமிழ் செல்வி மற்றும் கிராம உதவியாளர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.