திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில்  கர்ப்பிணிப் பெண் இறப்பு. உறவினர்கள் முற்றுகையிட்டு. போலீசார் விசாரணை.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில்  கர்ப்பிணிப் பெண் இறப்பு. உறவினர்கள் முற்றுகையிட்டு. போலீசார் விசாரணை.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்  ஆரிப் நகர் பகுதியைச் சேர்ந்தவர்  இம்ரான் (29)இவர் திருப்பத்தூர் அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் செருப்பு கடை நடைத்தி வருகிறார்.  மனைவி பரிதா (27) இவர்களுக்கு ஏற்கனவே  மூன்று வயதில் முகமது என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் பரிதா நிறைமாத கர்ப்பிணியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில்  பிரசவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீடீரென்று  பிரசவ வலி அதிகமாகி அதிகளவில்  ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது  பணியிலிருந்த செவிலியருக்கு இதுகுறித்து  தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் பணியில் இருந்த  செவிலியர்கள் அலட்சியமாக இருந்தாக  கூறப்படுகிறது. இதில் அதிக அளவில் வலி ஏற்பட்டு  தாய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ஆனால் பரிதாவுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் கவனக்குறைவால் தாய் இறந்த சம்பவம்  திருப்பத்தூர் பகுதியில் காட்டுத்தீயாக பரவியது. இதனை அறிந்த உறவினர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள்  திருப்பத்தூர் அரசு  மருத்துவமனையை  முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி தங்கவேல் மற்றும் ஆய்வாளர் பேபி  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன்பின் அதிகாரிகள் அளித்த உத்தரவாதத்தின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.  சம்பவத்தால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image