இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடிவு தமிழக ஆளுநர் சட்டசபையில் உரை.
புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் சட்டசபை இன்று காலை 10.00 மணிக்கு தொடங்கியது . ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்தினார் .
கவர்னர் பேசுகையில் ; முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுமண்டபம் விரைவில் கட்டிமுடிக்கப்படும்.தமிழக மக்கள் எந்த மதம் மற்றும் சமயத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் நலன் பாதுகாக்கப்படும். இலங்கைத்தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்க மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தும். கோதாவரி ஆற்றில் இருந்து குறைந்தது 200 டிஎம்சி நீரையாவது வழங்க, மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று பேசினார் .