செங்கல்பட்டு பெரியார் சிலை சேதப்படுத்திய வழக்கில் பாமக நிர்வாகி கைது..

செங்கல்பட்டு பெரியார் சிலை சேதப்படுத்திய வழக்கில் பாமக நிர்வாகி கைது..


துக்ளக் நிகழ்ச்சியில் பெரியார் பற்றி ரஜினி பேசியதை அடுத்து, தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகள் நடந்தன. ரஜினியின் கருத்துக்கு ஆதரவாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் நிற்க, ரஜினியின் கருத்துக்கு எதிராக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் நின்றன.


இந்த நிலையில், செங்கல்பட்டு அருகே உள்ள சாலவாக்கம் பகுதியில் களியப்பேட்டை என்ற இடத்தில் இருந்த பெரியார் சிலை சில நாட்களுக்கு முன் உடைக்கப்பட்டது. பெரியார் சிலையின் கை மற்றும் முகம் ஆகியவை சேதப்படுத்தப்பட்டன. சிலையை சேதப்படுத்தியவர்களை போலீசார் தேடி வந்தனர்.


இந்நிலையில், சாலவாக்கம் களியப்பேட்டை கிராமத்தை சேர்ந்த பாமக முன்னாள் ஒன்றிய செயலாளர்
கோ.தாமோதரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.


செய்தி- கோவி.சரவணன்- உத்தமன்..


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image